மது பாட்டில்களை பதுக்கிய 5 பேர் கைது


மது பாட்டில்களை பதுக்கிய 5 பேர் கைது
x

தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், காரிமங்கலம் பகுதிகளில் போலீசார் மதுவிலக்கு தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த மதியழகன் (வயது 51), ராமராஜன் (38), காரல் மார்க்ஸ் (45), வினோத் குமார் (32), சின்ன பையன் ஆகிய 5 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களிடமிருந்து ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள 450 மது பாட்டில்கள் சிக்கின. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story