முறைகேடாக முன்பதிவு ரெயில் டிக்கெட்டுகள் விற்ற 5 பேர் கைது


முறைகேடாக முன்பதிவு ரெயில் டிக்கெட்டுகள் விற்ற 5 பேர் கைது
x

வேலூரில் முறைகேடாக ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர்

வேலூரில் முறைகேடாக ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முறைகேடாக டிக்கெட்டுகள் விற்பனை

வேலூர் நகரில் முன்பதிவு ரெயில் டிக்கெட்டுகள் தனிப்பட்ட ஐ.டி-கள் மூலம் சட்டவிரோதமாக முன்பதிவு செய்து விற்பனை செய்யப்படுவதாகவும், ரெயில்வே இ-டிக்கெட்டுகளுக்கு சட்டவிரோத மென்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்புப்படை அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

அதையடுத்து ரெயில்வே பாதுகாப்புப்படை முதன்மை பாதுகாப்பு கமிஷனர் எஸ்.ராமகிருஷ்ணன் உத்தரவின்பேரில் இந்த செயலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் வேலூரில் உள்ள நெட் சென்டர்களை கடந்த சில நாட்களாக ரகசியமாக கண்காணித்தனர். அதில், சில நெட் சென்டர்களில் முறைகேடாக ரெயில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது உறுதியானது.

5 பேர் கைது

இதையடுத்து தனிப்படையினர் வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் (ஜே.எம்.எண்-1) அனுமதி பெற்று 6 குழுவினராக பிரிந்து வேலூர் சைதாப்பேட்டை, மெயின்பஜார், காந்திரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெட் சென்டர்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், 5 நெட் சென்டர்களில் முறைகேடாக முன்பதிவு ரெயில் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து முன்பதிவு டிக்கெட்டுகள் பெற வரும் பொதுமக்களிடம் ரூ.50 முதல் ரூ.500 வரை கூடுதலாக வசூலிப்பதும், ரெயில்வே நிர்வாகத்தின் அனுமயின்றி முறைகேடாக வெவ்வேறு சாப்ட்வேர்களை பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக தனிப்படையினர் 5 பேரை கைது செய்தனர். மேலும் அந்த நெட் சென்டர்களில் இருந்து ரூ.13 லட்சத்து 82 ஆயிரத்து 632 மதிப்பிலான கம்ப்யூட்டர்கள், மடிக்கணினி, பிரிண்டர்கள், செல்போன்கள், பயணம் செய்த மற்றும் பயணம் செய்ய வேண்டிய தேதியுடன் கூடிய இ-டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story