கத்தி, கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது


கத்தி, கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது
x

கத்தி, கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது

மதுரை

மதுரை திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் பேச்சியம்மன்படித்துறை தென்கரை பகுதியில் சென்ற போது போலீசாரை கண்டதும் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரட்டி சென்று பிடித்து விசாரித்தனர். அதில் செல்லூர் நாயக்கர் தெருவை சேர்ந்த ஜெயக்குமார்(வயது 51) என்பதும், அவர் பெரிய கத்தியை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதே போன்று திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி, நன்மை தருவார் கோவில் அருகே ரோந்து சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர்கள் 4 பேரை பிடித்து விசாரித்தார். அதில் அவர்கள் கீரைத்துறை வேதபிள்ளை தெருவை சேர்ந்த சரவணபாண்டி (29), புதூர் சங்கர் நகர் முதல் தெருவை சேர்ந்த சூர்யா (19), கீரைத்துறை சண்முகம், குட்டி என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா, பெரிய கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story