கஞ்சா விற்ற 5 பேர் கைது
கஞ்சா விற்ற 5 பேர் கைது
உக்கடம்
கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் செல்வபுரம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தேவாலயம் அருகே சந்தேகப்படும் வகையில் சிலர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போத்தனூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 24), மலுமிச்சம்பட்டியை சேர்ந்த சாகுல் ஹமீது (56), அவரது மகன் காதர் பாட்சா, போத்தனூரை சேர்ந்த ஹரிகரன் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மணிகண்டன், சாகுல் ஹமீது ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று செல்வபுரம் பனைமரத்தூர் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செல்வபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (24), போத்தனூரை சேர்ந்த பவின் (20), தெலுங்குபாளையத்தை சேர்ந்த சக்தி பாரதி (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.