கார்கள் திருடிய 5 பேர் கைது


கார்கள் திருடிய 5 பேர் கைது
x

கார்கள் திருடிய 5 பேர் கைது

தஞ்சாவூர்

தஞ்சையில் கார் திருடிய 5 பேரை கைது செய்த போலீசார் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

டிராவல்ஸ் உரிமையாளர்

தஞ்சை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 50). டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர். தன்னுடைய நிறுவனத்தில் உள்ள கார்களை புதிய வீட்டுவசதிவாரியகுடியிருப்பு எதிரில் உள்ள அலுவலகம் அருகே நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று இரவு அலுவலகத்திற்கு எதிரே நிறுத்தி வைத்திருந்த 2 கார்களை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் கார்கள் கிடைக்கவில்லை.

இதனால் கார்களை மர்மநபர்கள் திருடிசென்று விட்டதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் அன்பழகன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள மூலிகை பண்ணை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.

திருடப்பட்ட கார்

அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் வந்த காரை மறித்தனர். போலீசார் காரை மறிப்பதை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓட முயற்சித்தனர். உடனே அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர்கள் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பூக்கார வியாகுல தெருவை சேர்ந்த சேவியர் மகன் ரெனால்ட் (28), தஞ்சையை சேர்ந்த பகவதி மகன் தவபாண்டியன் (39), தென்வெட்டுகார தெருவை சேர்ந்த மதியழகன் மகன் ஹரிகரன் (26) ஆகியோர் என்பதும், அவர்கள் ஓட்டி வந்தது திருடப்பட்ட கார் என்பதும் தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வண்ணாரப்பேட்டை பகுதிக்கு சென்று அங்கிருந்த தஞ்சை-புதுக்கோட்டை சாலை ஆர்.ஆர்.நகரை சேர்ந்த சதீஸ்குமார் (40), திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோரிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


Related Tags :
Next Story