மாடு திருடிய 5 பேர் கைது


மாடு திருடிய 5 பேர் கைது
x

கொட்டாம்பட்டி அருகே மாடு திருடிய 5 பேரை கைது செய்தனர்.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே மாடு திருடிய 5 பேரை கைது செய்தனர்.

மாட்டை வேனில் ஏற்ற முயற்சி

கொட்டாம்பட்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சின்னகற்பூரம்பட்டி, சானிபட்டி, நெல்லுகுண்டுபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் மாடு, ஆடுகளை திருடும் கும்பல் கைவரிசை காட்டி வந்தது. இந்த கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரத்தை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயியான இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

வழக்கம் போல் பசுமாட்டை வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் அடைத்துவிட்டு தூங்க சென்றுவிட்டார். அதிகாலையில் பசுமாட்டினை சிலர் கயிற்றுடன் பிடித்து மினி வேனில் ஏற்ற முற்பட்டனர். அப்போது மாட்டின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். யாரோ சிலர் பசுமாட்டை மினிவேனில் ஏற்றியதை பார்த்து சந்தேகத்தின் பேரில் அவர்களை சுற்றி வளைத்தனர். சத்தம் கேட்டு முத்துசாமியும் ஓடி வந்து மாடு திருடர்களை பார்த்து சத்தம் போட்டார்.

5 பேர் கைது

இது குறித்து தகவல் அறிந்ததும் கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்திபாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மர்ம நபர்கள் 5 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்று நடத்திய விசாரணையில் அரிட்டாபட்டியை சேர்ந்த நல்லையன் மகன் கார்த்திக் (வயது 28), மாங்குளம் லெட்சுமிபுரத்தை சேர்ந்த மனோஜ் (19), ஞானசேகர் (31), ராஜேந்திரன் (20), சேதுபதி (22) ஆகிய 5 பேரும் மினிவேனில் வந்து பசு மாட்டை திருட முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து மினிவேனையும் பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் அதிகாலை நேரத்தில் ஆடு, மாடுகளை நோட்டமிட்டு அதை கடத்தி சென்று விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story