ஆடு திருடிய 5 பேர் கைது


ஆடு திருடிய 5 பேர் கைது
x

ஆடு திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி, ஆவியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தன. இதையடுத்து அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு காரட் கரூண் உத்தராவ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி மற்றும் போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆவியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீனாட்சிபுரம்- முஸ்டக்குறிச்சி சாலையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வேனில் இருந்தவர்களை போலீசார் விசாரிக்க சென்றனர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் வேனில் இருந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரியாபட்டி அருகே உள்ள கே. ஆலங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 45), மேல கள்ளங்குளத்தை சேர்ந்த அய்யங்காளை (35), நாகனேந்தல் கிராமத்தை சேர்ந்த முருகன் (47), மதுரையை சேர்ந்த பிரபு (40), சிவகங்கை மாவட்டம், மருதங்குடியை சேர்ந்த கருப்பையா (36) என்பதும், ஆடுகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் 5 பேரையும் ஆவியூர் போலீசார் கைது செய்தனர். ஆடு திருட பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story