நிலத்தகராறில் 5 பேர் கைது
நிலத்தகராறில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
கெங்கவல்லி;-
கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் நடுவலூர் சாலையில் சுபாஷினி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இவருடைய கணவர் பரமசிவன் கிருஷ்ணகிரியில் டாக்டராக உள்ளார். சுபாஷினி நிலத்தை, பரமசிவனின் அண்ணன் சிறுவாச்சியூரை சேர்ந்த மோகன்ராஜ் பராமரித்து வருகிறார். அந்த நிலத்துக்கு அருகில் கனகராஜ் என்பவருக்கு சொந்தமான நிலமும் உள்ளது. இதற்கிடையே நிலம் தொடர்பாக கனகராஜ், மோகன்ராஜிடம் தகராறு செய்ததாகவும், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மோகன்ராஜை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கெங்கவல்லி போலீசார் கனகராஜ் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் கனகராஜ், கவுசிக், நிர்மல்குமார், வேல்முருகன், விமலேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். முருகேசன், நடராஜன், செல்வம் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story