வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது


வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சி அருகே வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்

கடையம்:

ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள கீழாம்பூரில் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் உள்ள நெல்களத்தில் கடந்த 27-ந் தேதி 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கீழாம்பூர் துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரமாச்சி மகன் கருத்தபாண்டி என்ற கார்த்தி (வயது 21), பிரம்மதேசம் கீழத்தெருவைச்சேர்ந்த மாரியப்பன் மகன் சண்முககுட்டி என்ற மதன் (27), காக்கநல்லூர் வேத கோவில் தெருவைச்சேர்ந்த முப்புலிபாண்டியன் மகன் பேச்சி (25) ஆகிய 3 பேரையும் ஆழ்வார்குறிச்சி போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர்களுடன் மேலும் 2 பேர் சம்பந்தப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் இந்த 3 பேரை கைது செய்து அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ேமலும் இந்த கொலை தொடர்பாக காக்கநல்லூர் மெயின்ரோடு கணேசன் மகன் தர்மர் (30), சுப்பையா மகன் லட்சுமணன் (24) ஆகியோரையும் பிடித்து விசாரித்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலையானவர் பற்றிய விவரம் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story