வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது


வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது
x

குதிரை வண்டி பந்தய முன்விரோதத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சி உறையூர் சன்னதி தெருவை சேர்ந்த முருகனின் மகன் சண்முகம் (வயது 25). இவர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று குதிரை வண்டி பந்தயங்களில் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் குழுமணி டாக்கர் ரோடு பகுதியில் நடந்து சென்ற அவரை, ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய உறையூரை சேர்ந்த தாடி கோபால் (30), ஹரி பிரசாத் (23), விஜி (23) ஆகிய 3 பேரை உறையூர் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குதிரை வண்டி பந்தய தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சண்முகத்தை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நவீன்குமார் (28), அபிசேக் (22) ஆகிய 2 பேரை உறையூர் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story