உளுந்தூர்பேட்டை அருகேநாட்டு துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே நாட்டு துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அடுத்த எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தலைமையிலான போலீசார் புல்லூர் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 2 நாட்டு தூப்பாக்கிகளுடன் நின்றிருந்த 5 பேரை போலீஸ் நிலையத்திற்கு பிடித்து சென்று விசாரித்தனர். அதில் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் சூசை (வயது 45), சின்னப்பன் மகன்கள் தொன்போஸ்கோ (23), அந்துவான் கிறிஸ்தவராஜ் (28), ஆரோக்கியதாஸ் மகன் அந்துவான்( 19), மேமாலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான் எடிசன் (22) என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story