பெண் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பெண் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தம்பதி கைது

எட்டயபுரம் வீரப்பட்டி சேவியர் காலனி பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் மாணிக்கராஜ் (வயது 28) மற்றும் அவருடைய மனைவி ரேஷ்மா (20) ஆகிய 2 பேரையும் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 25-ந்தேதி கொலை செய்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த ரேஷ்மாவின் தந்தை சாமிதாஸ் மகன் முத்துக்குட்டி (44) மற்றும் அவருடைய மனைவி மகாலட்சுமி (39) ஆகிய 2 பேரையும் எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கடந்த மே மாதம் 25-ந்தேதி தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை நல்லம்மாள்புரம் பகுதியை சேர்ந்த தவசிமணி மனைவி தாமரைபுஷ்பம் அவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அவர் அணிந்திருந்த 3½ பவுன் தாலி செயினை கொள்ளையடித்து சென்ற வழக்கில் குமரன்விளை பகுதியை சேர்ந்த திருமால்கரன் மகன் பிரபாகரன் (30) என்பவரை தட்டார்மடம் போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமியை தாக்கி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தாளமுத்துநகர் கிழக்கு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் முருகன் (42) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கடந்த மாதம் 29-ந்தேதி ஏரல் அருகே சிவகளை பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை பகுதியை சேர்ந்த அரசமுத்து (62) என்பவரை ஏரல் போலீசார் கைது செய்து 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் 5 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் முத்துக்குட்டி, அவருைடய மனைவி மகாலட்சுமி, பிரபாகரன், முருகன், அரசமுத்து ஆகிய 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், மகாலட்சுமியை மதுரை பெண்கள் சிறையிலும், மற்ற 4 பேரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைத்தனர்.


Related Tags :
Next Story