வாலிபர் கொலையில் அண்ணன், தம்பி உள்பட 5 பேர் கைது
வாலிபர் கொலையில் அண்ணன், தம்பி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 32). சுமை தூக்கும் ெதாழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருநகர் 5-வது பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் சரவணனை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. அதில் படுகாயமடைந்த சரவணன் இறந்தார். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக சரவணன் படுகொலை செய்யப்பட்டார் என்று தெரியவந்தது. மேலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் திருநகர் பகுதியில் பதுங்கி இருந்த ராஜ் என்ற சுபம்(27), பாண்டியன் நகரை சேர்ந்த விஷ்வா(20), ஆனந்த், கார்த்திக் கண்ணன், ராஜ்குமார்(20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான தாமரைகண்ணனை வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேர்களில் விஷ்வா, ஆனந்த் ஆகிய 2 பேரும் சகோதரர்கள் ஆவார்.