ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் கைது


ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் கைது
x

ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் கைது

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம் ஈச்சன்விடுதி காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தகவல் வந்தது. இதையடுத்து திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது, 6 மாட்டுவண்டிகளில் 7 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மணல் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் மற்றும் அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக சரவணன் உள்ளிட்ட பலர் மீது திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர். இந்தநிலையில் மணல் திருட்டில் ஈடுபட்ட ராமன், துரை மற்றும் அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்த செருவாவிடுதி தெற்கு ஊராட்சி மன்ற தலைவர் தங்கராமஜெயம், வினோத் குமார், ராஜாராம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி 5 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story