சாராயம் விற்ற பெண் உள்பட 5 பேர் கைது
சாராயம் விற்ற பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
சாராயம் விற்ற பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
கீழ்வேளூர் அருகே ஆலங்குடி, நீலப்பாடி, தேவூர், சிக்கல் பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நீலப்பாடி கிராம சேவை மையம் அருகில் சாராயம் விற்ற ராயத்தமங்கலம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஏசுதாஸ் மகன் ஆகாஷ் (வயது 20), நீலப்பாடி சிவன் கோவில் தெரு பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த வீரமணி மகன் சதீஷ் (28), ஆலங்குடி மெயின் ரோட்டில் சாராயம் விற்ற ராமாபுரம் பகுதியை சேர்ந்த தவமணி மகன் ராஜ்குமார் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது
இதேேபால் தேவூர் மெயின் ரோடு பகுதியில் சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம் தாமரைகுளம் தென்கரையை சேர்ந்த செல்ல பாண்டி மனைவி சத்யா (35), சிக்கல் மடத்தான் தெரு பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த விஜயகாந்த் (38) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.