சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது


சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
x

சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் தாந்தோணிமலை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் தாந்தோணிமலை சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் கொழந்தா கவுண்டனூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து சிதறி ஓடினர். இருப்பினும் போலீசார் 5 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோடங்கிபட்டியை சேர்ந்த கனகராஜ் (வயது 27), கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த புருஷோத்தமன் (24), சரவணகுமார் (30), கொழந்தா கவுண்டனூரை சேர்ந்த குமார் (30), கடவூரை சேர்ந்த கருணாகரன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story