பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் சிக்கினர்


பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் சிக்கினர்
x

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் சிக்கினர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

மோட்டார் சைக்கிள் பந்தயம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத மற்றும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களாகவே இளைஞர்கள் இரவு நேரங்களில் நவீன ரக மோட்டார் சைக்கிள்களில் பந்தயத்தில் ஈடுபவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று இரவு திருச்சி- சிதம்பரம் பைபாஸ் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே 10 பேர் மோட்டார் சைக்கிளில் பந்தயத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாஹிராபானுவுக்கு தகவல் தெரிவித்தனர்.

5 பேரிடம் விசாரணை

இதையடுத்து அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் சாஹிராபானு மற்றும் ஜெகன்நாத் தலைமையிலான போலீசார், பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து, தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது சம்பவம் குறித்து அவர்களது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


Next Story