கத்தியை காட்டி பணம் பறித்த 5 பேர் கைது
கத்தியை காட்டி பணம் பறித்த 5 பேர் கைது
மதுரை புதூர் கணபதிகோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 49). இவர் தல்லாகுளம் பெருமாள் கோவில் பின்புறம் நடந்து சென்றார். அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 3 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றது. இதுகுறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகளான கருப்பாயூரணி ஒத்தவீடு பகுதியை சேர்ந்த மார்க்கண்டேயன்(30), செல்லூர் சத்தியமூர்த்தி நகர் 7-வது தெருவை சேர்ந்த மணிகண்டன்(22), மீனாம்பாள்புரம் 5-வது தெரு மருதுபாண்டியன் நகரை சேர்ந்த விஜய் (24), செல்லூர் சத்தியமூர்த்தி நகர் 5-வது தெருவை சேர்ந்த செல்வகுமார்(22), மீனாட்சிபுரம் 2-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற பிள்ளையார் (25) ஆகியோரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.