மாடக்குளம் கண்மாய்கரை பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது


மாடக்குளம் கண்மாய்கரை பகுதியில்  கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது
x

மாடக்குளம் கண்மாய்கரை பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை


மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மாடக்குளம் கண்மாய் பகுதியில் கஞ்சாவுடன் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கிருந்த 7 பேரை சுற்றி வளைத்தனர். அதில் 5 பேர் போலீசாரிடம் சிக்கினர்.அவர்களிடம் போலீசார் விசாரித்த போது புதுஜெயில்ரோடு முரட்டன்பத்திரியை சேர்ந்த சகோதரர்கள் பாண்டியராஜன் (வயது 23), பிரசாத் (22), திருப்பாலை அன்புநகர் முத்துக்கிருஷ்ணன் (24), வில்லாபுரம் ஈஸ்வரன் (35), ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் தெரு பாலசுப்பிரமணியன் (24) என்பதும், அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்து விற்பதற்காக அங்கிருந்ததும் தெரியவந்தது. பின்னர் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 7 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற கல்மேடு பகுதியை சேர்ந்த விக்கி, விஜய் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story