இருதரப்பினர் மோதலில் 5 பேர் கைது


இருதரப்பினர் மோதலில் 5 பேர் கைது
x

இரு தரப்பினர் மோதலில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் சூலக்கரையை சேர்ந்தவர் கயல்விழி (வயது 23). இவரது கணவர் மீனா சுந்தர முருகன் மற்றும் அவரது சகோதரர் முத்து முருகன். இவர்கள் இருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜசேகரன் (22) உள்பட 4 பேருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேற்கண்ட 4 பேரும் மீனா சுந்தர முருகனையும், முத்து முருகனையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கயல்விழி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் ராஜசேகரன் உள்பட 4 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ராஜசேகரன் சூலக்கரை போலீசில் கொடுத்துள்ள புகாரில் மீனா சுந்தர முருகனும், முத்து முருகனும் தங்களை தாக்கியதாக கூறியதன்பேரில் போலீசார் மேற்படி 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து முத்து முருகனை கைது செய்தனர். மீனா சுந்தரமுருகன் சிகிச்சைக்காக விருதுநகர் அரசுஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Related Tags :
Next Story