புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் சிக்கினர்
விழுப்புரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம், சுதாகர் நகர், பானாம்பட்டு பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரணிநாதன், சத்யா ஆகியோர் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த முருகன் (வயது 60), விழுப்புரம் என்.எஸ்.கே. நகர் கனகராஜ் (54), பானாம்பட்டு ரமேஷ் (44), வசந்தகுமார் (32) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 156 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கோனூர் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக அதே கிராமத்தை சேர்ந்த தெய்வசிகாமணி (40) என்பவரை காணை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 5 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story