வாகனம் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்


வாகனம் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
x

என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் வாகனம் கவிழ்ந்து 5 பேர் படுகாயமடைந்தனர்.

கடலூர்

நெய்வேலி,

நெய்வேலி என்.எல்.சி. 2-வது நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் 4 தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு வாகனம் ஒன்று வெளியே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாகனத்தில் வந்த டிரைவர் உள்பட 5 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story