பட்டப்பகலில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி அபேஸ்


பட்டப்பகலில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி அபேஸ்
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு: பட்டப்பகலில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி அபேஸ் மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள செங்கனாங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மனைவி தனலட்சுமி(வயது 60). இவர் நேற்று மாலை திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசல் இருந்ததால் வேறு பஸ்சில் செல்வதற்காக தனலட்சுமி பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் தனது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பார்த்தபோது காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் தங்க சங்கிலியை அபேஸ் செய்து விட்டு சென்றார். இதனால் திடுக்கிட்ட தனலட்சுமி கூச்சல் எழுப்பினார். இந்த சத்தம் கேட்டு சக பயணிகள் ஓடி வந்து சங்கிலியை அபேஸ் செய்த மர்மநபரை தேடினா். ஆனால் எங்கு தேடியும் அவரைகாணாததால் தனலட்சுமி தொடர்ந்து அழுது கொண்டிருந்தார். அபேஸ்செய்த தங்க சங்கிலியின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் பஸ் நிலையம் முழுவதும் மர்ம நபரை தேடி அலைந்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை. இது குறித்து போலீசார் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர் அபேஸ் செய்த சம்பவத்தால் திருக்கோவிலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story