பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x

லால்குடி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி

லால்குடி, மே.31-

லால்குடி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கிலி பறிப்பு

லால்குடி அருகே அருேக உள்ள பின்னவாசல் திரு.வி.க.தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 51), விவசாயி. நேற்று முன்தினம் இரவு பார்த்திபன், அவரது தாய் கனகாம்பாள், சகோதரர் புண்ணியமூர்த்தி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கனகாம்பாளின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தை கனகாம்பாள் பார்த்திபனிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் லால்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Next Story