மேலூரில் 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு


மேலூரில்  5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு
x

மேலூரில் 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருடுபோனது

மதுரை

மேலூர்,

மேலூரில் மில்கேட் சத்யாநகரை சேர்ந்தவர் அபிமன்யு (வயது 28). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பதினெட்டாங்குடியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் கை செயின் ஒன்று, ஒரு பவுன் தங்க மோதிரம் ஒன்று, ஒரு பவுன் தங்கத்தோடு உள்ளிட்ட 5 பவுன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயையும் திருடி சென்றனர். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story