மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு


மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
x

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

வால்பாறை அருகே உள்ள வழுக்குபாறை பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி பொண்ணுமணி (வயது 65). இவர் குடும்பத்துடன் கோவை செல்வதற்கு பொள்ளாச்சி-கோவை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் சேரன் நகர் அருகே சாலையோரத்தில் உள்ள ஒர்க்ஷாப்பில் வாகனத்தை நிறுத்துவதற்கு மணி சென்றதாக தெரிகிறது. சாலை ஓரத்தில் பொண்ணுமணி தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் ஹெல்மெட், பின்னால் இருந்த நபர் முகமூடி அணிந்து இருந்ததும், 5 பவுன் தாலி செயினை பறித்து சென்றதும் தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சேரன் நகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மகாலிங்கபுரம் போலீஸ் எல்லைக்குள் ஒரு வாரத்திற்குள் பட்டப்பகலில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து செல்லவும், முக்கிய சாலைகளில் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story