மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில்வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு 'சீல்'
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு குழித்துறை நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
குழித்துறை:
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு குழித்துறை நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
வாடகை செலுத்தாத கடைகள்
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் மற்றும் வெட்டுமணி பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டு, பலர் வியாபாரம் செய்து வருகிறார்கள்.
அந்த கடைகளுக்கு பலர் உரிய காலத்தில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் உள்ளனர். சிலர் நீண்ட காலமாக வாடகை கட்டணம் செலுத்தாமல் வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்த கடைகளை கண்டறிந்து நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
5 கடைகளுக்கு 'சீல்'
அதன்படி குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் அறிவுரைப்படி வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் ஊழியர்கள் நேற்று நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் நீண்ட காலமாக 5 கடைகளுக்கு வாடகை செலுத்தாமல் வியாபாரம் செய்து வந்தது கண்டுபிடித்தனர்.அதைத் தொடர்ந்து அந்த 5 கடைகளுக்கும் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் 'சீல்' வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.