கோடைக் காலத்தை முன்னிட்டு 5 சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


கோடைக் காலத்தை முன்னிட்டு 5 சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

கோடைக் காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 5 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி தாம்பரம்-திருநெல்வேலி இடையே ஏப்ரல் 27, மே 4, 11, 18 மற்றும் 25-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில், காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் நெல்லை-சென்னை எழும்பூர் இடையே ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.

மேலும் நாகர்கோவில்-தாம்பரம் மற்றும் தாம்பரம்-நாகர்கோவில் இடையே ஏப்ரல் 23-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை குறிப்பிட்ட 11 நாட்களுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதே போல் திருவனந்தபுரம்-சென்னை எழும்பூர் இடையே மே மற்றும் ஜூன் மாதங்களில் குறிப்பிட்ட 9 நாட்களுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்திலும் அதே நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.



Next Story