குரூப்-1 தேர்வை 5 ஆயிரத்து 267 பேர் எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 5 ஆயிரத்து 267 பேர் எழுதினார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 5 ஆயிரத்து 267 பேர் எழுதினார்கள்.
குரூப்-1 தேர்வு
தமிழகத்தில் குரூப்-1 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 8 ஆயிரத்து 349 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 5 ஆயிரத்து 267 பேர் தேர்வு நேற்று எழுத வந்திருந்தனர். 3 ஆயிரத்து 82 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வை கண்காணிக்க 3 பறக்கும்படை குழுக்களும், 7 நடமாடும் குழுக்களும், 26 ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் ஆய்வு
தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கண் சிகிச்சை தொடர்பான மருந்துகள் போதிய அளவு இருப்பு உள்ளன. கல்வி நிறுவனங்களில் பயிலும் குழந்தைகளுக்கு கண் சிகிச்சை அளிக்க ஒவ்வொரு வட்டாரத்துக்கும் 2 குழுக்கள் உள்ளன.
இவர்கள் அனைத்து அங்கன்வாடி, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி குழந்தைகளையும் பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கின்றனர். இந்த குழுக்கள் கண் தொடர்பான நோய்கள் குறித்து கண்காணிக்கின்றனர். மேலும் இதுதொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் தேவையான அறிவுரைகள் வழங்கப்படும்.
மேலும் தமிழ்நாடு அரசு மருத்துவ கழக மாவட்ட மருத்துவ கிடங்கில் 354-க்கும் மேற்பட்ட கண் மருந்துகள் இருப்பில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.