5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யத்தில், கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தங்கள் படகுகளை கொண்டு சென்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில், கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தங்கள் படகுகளை கொண்டு சென்றனர்.
கடல் சீற்றம்
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், வாணவன்மகாேதவி, விழுந்தமாவடி உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.நேற்று வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் கரைப்பகுதியை பலமாக தாக்கின.
5 ஆயிரம் மீனவர்கள்
குறிப்பாக கோடியக்கரை மீனவ கிராமத்தில் ராட்சத அலைகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் சீற்றம் காரணமாக படகுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனா்.சில மீனவர்கள் கடற்கரையில் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை டிராக்டர் மூலம் படகுகளை மேடான பகுதிகளுக்கு அவசர அவசரமாக கொண்டு சென்று நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.