5 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை


5 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
x

கொள்ளிடம் அருகே கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

மீன்பிடிக்க செல்லவில்லை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து 350 விசைப்படகுகள், 400 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறி உள்ளது. இதனால் கடல் சீற்றமாக இருந்து வருவதால் மீன்வளத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று 2-வது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

தொழிலாளர்கள் பாதிப்பு

மீன்களை பதப்படுத்துதல், கருவாடு உலரவைத்தல், கருவாடு விற்பனை, வெளியூர்களுக்கு வாகனங்களில் மீன்களை அனுப்பி வைத்தல், ஐஸ்கட்டி தயாரித்தல், தூய்மை பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் கொடியம்பாளையம், மடவாமேடு, கொட்டாய்மேடு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கசெல்லவில்லை.


Next Story