5 டன் முருங்கைக்காய் வரத்து
5 டன் முருங்கைக்காய் வரத்து
வெள்ளகோவில்
வெள்ளகோவில் கொள்முதல் மையத்திற்கு 5 டன் முருங்கைக்காய் வந்தது. கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதால்விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 டன் முருங்கைக்காய் வரத்து
வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
நேற்று 60 விவசாயிகள் 5 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.85 முதல் ரூ.90 வரைக்கும், மரம் முருங்கை ரூ.70முதல் ரூ.80 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.90 முதல் ரூ.100 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
தற்போது மழையின் காரணமாக முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது. விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சத்தீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து ெதரிவித்தார்.
----