ஏரியில் கொட்டப்பட்ட 5 டன் வெண்டைக்காய்
ஆற்காடு அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 43), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். கடந்த மே மாதம் இவரது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 46 பவுன் நகை, 750 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து ஜெகநாதன் கொடுத்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் கூட்ரோட்டில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (28) என்பதும், ஜெகநாதன் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2½ பவுன் நகைகள், வாஷிங் மிசின், டி.வி. உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அவரது சித்தப்பா ஆனந்த ஒளியை தேடி வருகின்றனர்.