5 பெண்கள் கைது


5 பெண்கள் கைது
x

5 பெண்கள் கைது

தஞ்சாவூர்

தாக்கப்பட்டதாக புகார் கூறிய மூதாட்டி இறந்தநிலையில் 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டி மீது தாக்குதல்

தஞ்சையை அடுத்த திட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது68). அதே பகுதியை சேர்ந்தவர் வசந்தா (60). இந்தநிலையில் செல்லம்மாள், கடந்த சில நாட்களுக்கு முன்பு திட்டை மெயின் ரோடு அருகில் உள்ள கடையில் நின்றுக் கொண்டிருந்த வசந்தாவை திட்டினார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இது பற்றி வசந்தா தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து வசந்தாவின் மகள்கள் மற்றும் உறவினர்கள் செல்லம்மாளை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லம்மாள் இறந்தார்.

5 பெண்கள் கைது

இது தொடர்பாக தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தனது கணவருடன் ஏன்? பேசி பழகுகிறாய் என செல்லம்மாள் கேட்டு தகராறு செய்ததால் அவர் தாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வசந்தா, அவரது மகள்கள் பிரபாவதி (34), ராதிகா (33), வசந்தாவின் தம்பி மனைவி கீதா (43), கீதாவின் மகள் வினோதினி (23) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் செல்லம்மாள் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் செல்லம்மாளை, வசந்தா உள்ளிட்டோர் தாக்கியதில் இறந்தாரா? என்பது பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே தெரியவரும். அதன்பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story