வாலிபருக்கு 5 ஆண்டு சிறை


வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
x

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோயம்புத்தூர்


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாலியல் தொல்லை

கோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆசிக் (வயது 24). இவர் கடந்த 2017-ம் ஆண்டு கோவையில் 9-ம் வகுப்பு படித்து வந்த 2 மாணவிகளை ஆசைவார்த்தை கூறி ஊட்டிக்கு கடத்தி சென்றார். பின்னர் அவர், அந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 மாணவிகளும் அங்கிருந்து தப்பித்து கோவை வந்தனர். அவர்கள் நடந்த சம்பவம் பற்றி தங்களின் பெற்றோரிடம் கூறி அழுதனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கடத்திச்செல்லுதல், போக்சோ ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் ஆசிக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

5 ஆண்டு சிறை

இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நேற்று முடி வடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிக்கிற்கு மாணவிகளை கடத்திச்சென்ற பிரிவுக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலியல் தொல்லை கொடுத்த போக்சோ பிரிவுக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி குலசேகரன் தீர்ப்பு கூறினார். இதையடுத்து ஆசிக்கை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.


Next Story