வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை


வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை
x

வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூர்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 33). இவர், தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நண்பர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். பின்னர் அதே கிராமத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.அதுமட்டுமின்றி அந்த சிறுவனுக்கு ரூ.10 கொடுத்து விட்டு இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் சிறுவன் கூறியுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

5 ஆண்டுகள் சிறை

பின்னர் இந்த வழக்கு பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இது குறித்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதாம் உசேனை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து சதாம் உசேனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கும்படி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.


Related Tags :
Next Story