50 ஏக்கர் நெற்பயிர்கள் மழையால் சேதம்
ெவண்குன்றம் கிராமத்தில் 50 ஏக்கர்நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் மூழ்கி நெல்மணிகள் முளைத்ததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
வந்தவாசி
ெவண்குன்றம் கிராமத்தில் 50 ஏக்கர்நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் மூழ்கி நெல்மணிகள் முளைத்ததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாய நிலம்
வெண்குன்றம் கிராமத்தில் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது பெய்த ஒரு நாள் மழையில் பெருக்கெடுத்த தண்ணீர் பயிர்களை மூழ்கடித்தது.
அதில் இருந்த நெல் மணிகள் மண்ணில் விழுந்து தற்போது முளைத்து விட்டன. 3 மாதம் கஷ்டப்பட்டு கடன் வாங்கி உரமிட்டு வளர்த்த நெற்பயிர்கள் அறுவடைக்கு வந்து மகசூல் கிடைக்க வேண்டிய நேரத்தில் மூழ்கியதால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என விவசாயிகளை வேதனை அடையசெய்துள்ளது.இது குறித்து விவசாயி காசி கூறுகையில், ''நான் நிலங்களை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறேன். இந்த நிலையில் 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்து 3 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தேன்.
அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த மழையின் காரணமாக நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் நிலத்தில் இருந்த நெற்கதிர்கள் நாற்றுகளாக முளைத்துவிட்டது.
நிவாரணம் கிடைக்கவில்லை
நிவாரணம் பெறுவதற்கு வேளாண்மை துறை அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிப்பு ஏற்பட்ட நிலத்திற்கு வந்து ஆய்வு செய்ய வரவில்லை.
இதேபோல் பக்கத்து வயல்களிலும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக பயிர்களை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.