50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

சிவகாசி, திருத்தங்கலில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதை தொடர்ந்து கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதார பிரிவு அதிகாரிகள் சித்திக், கந்தசாமி, செல்வராஜ், ஆசிர்வாதம், முத்துராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 22 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்டவர்களுக்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்தனர்.இது போன்ற திடீர் சோதனை இனி தொடர்ந்து நடைபெறும் என்று கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.


Next Story