ஆனைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 50 புதிய வீடுகள்


ஆனைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 50 புதிய வீடுகள்
x
தினத்தந்தி 29 Oct 2022 6:45 PM GMT (Updated: 29 Oct 2022 6:46 PM GMT)

விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 50 புதிய வீடுகள் கட்டுவதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

விருதுநகர்

காரியாபட்டி,

விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 50 புதிய வீடுகள் கட்டுவதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

50 வீடுகள்

விருதுநகர் ஆனைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் 50 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பழுதடைந்த வீடுகளை மீண்டும் கட்டித்தர நடவடிக்கை எடுத்துள்ளார். ஆண்டுதோறும் முகாம்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி ஆனைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 115 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு 300 சதுர அடி அளவு கொண்ட நிரந்தரமான கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது முதல் கட்டமாக 50 வீடுகள் ரூ 3.45 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சிவகாசி யூனியன் ஆனையூர் பகுதியில் ரூ.40.3 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கால்நடை ஆஸ்பத்திரியையும் அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், ஜி.அசோகன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காரியாபட்டி

காரியாபட்டி தாலுகா, கம்பிக்குடி ஊராட்சி, மந்திரிஓடை கிராமத்தில், நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 54 குடும்பத்தினர்களுக்கு ரூ.3.19 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான பணிகளுக்கு மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். .இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் திலகவதி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், கமலி பாரதி, யூனியன் தலைவர்கள் பொன்னுத்தம்பி, முத்துமாரி, துணைத்தலைவர் ராஜேந்திரன், காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரியம்மாள், சிவகுமார், காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, செம்பொன் நெருஞ்சி சந்திரன், நரிக்குடி ஒன்றிய செயலாளர் கண்ணன், திருச்சுழி ஒன்றிய செயலாளர் சந்தனப்பாண்டி, முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜா, தி.மு.க. பிரமுகர்கள் வாலை முத்துச்சாமி, சின்னபோஸ், காரியாபட்டி முன்னாள் நகர செயலாளர் தங்கப்பாண்டியன், மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், கல்யாணி, காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், முகமது முஸ்தபா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story