சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே சேர்ந்தமரம் கள்ளம்புலி ரோட்டில் உள்ள நீலமடை அய்யனார் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு கோவிலுக்கு தீர்த்தம் அழைப்பு, முளைப்பாரி ஊர்வலம் நடந்து கொண்டு இருந்தது. இந்த ஊர்வலமானது பஸ் நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அருகில் உள்ள ஒரு தெரு வழியாக செல்ல முயன்றதாக தெரிகிறது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அந்த தெரு வழியாக ஊர்வலம் செல்ல அனுமதிக்க கோரி திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




Next Story