கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் மூலம் இடுபொருட்களுக்கு 50 சதவீதம் மானியம்
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் மூலம் இடுபொருட்களுக்கு 50 சதவீதம் மானியம்
ஆனைமலை
ஆனைமலை ஒன்றியத்தில் மானிய திட்டங்களில் 80 சதவீதம் இடுபொருட்கள் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் திவான்சாபுதூர், சோமந்துறை, தென்சித்தூர், இரமணமுதலிபுதூர், பில்சின்னாம்பாளையம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் உள்பட்ட கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகள் ,பயனாளிகள் துறைகளால் தேர்வு செய்யப்பட்டு மானியம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.ஆனைமலை கோட்டூர் வேளாண்மை விரிவாக்க மையங்கள் வாயிலாக இரும்பு மண்வெட்டி, கொத்து, கடப்பாறை, 2கதிர்அரிவாள், சட்டி (தளை) ரூ.1,462 மானியத்திலும் தென்னைக்கு பயன்படுத்த தக்கைப்பூண்டு, திரவ உயிர்உரங்கள், போராக்ஸ் ரூ.3,063 மானித்திலும், இயற்கை முறையில் தென்னை காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி, லூர்கள் ரூ.700 மானியமாகவும் (ம) பச்சை மஸ்கார்டைன் பூஞ்சானம், கேரளா வேர்வாடல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் உயிர் கொல்லி பூஞ்சாணம் டி.விரிடி 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நெல் சாகுபடியாளர்கள் இரண்டாம் நிலை ஊட்டச்சத்துகள் பயன்படுத்துதலை ஊக்கப்படுத்துவதற்காக சிங்க் சல்பேட், ஜிப்சம் உரங்கள் முறையே கிலோ ரூ.25 மானியத்திலும், கிலோ ரூ.1.25 மானியத்திலும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மானாவாரி விவசாயிகளுக்கு, திரவ இயற்கை இலைவழி தெளிப்பு உரம் ஒரு விவசாயிக்கு 1.5 லிட்டர் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தர் தெரிவித்தார்.