விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதை நெல், உரம்


விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதை நெல், உரம்
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதை நெல், உரம் வழங்கப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதை நெல், உரம் வழங்கப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறுவை சாகுபடி

தலைஞாயிறு பகுதியில் 4 ஆயிரம் எக்ேடரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் தலைஞாயிறு பகுதியில் கூடுதலாக 5 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வயலை உழவு செய்தல் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறுவை சாகுபடிக்காக தலைஞாயிறு, நீர்முளை, கொத்தங்குடி பனங்காடி ஆகிய 4 வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஆடுதுறை 53 நெல் விதை 44 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் விதை, உரம்

மேலும் சாகுபடிக்கு தேவையான சிங் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட நுண்ணூட்ட சத்து உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விதை நெல் மற்றும் உரங்கள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இதை விவசாயிகள் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story