நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம்


நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம்
x

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

2023-24-ம் ஆண்டிற்கு கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் அமைக்க முதற்கட்டமாக 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 3 பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே நாட்டுக்கோழி வளர்ப்பில் திறமையும், ஆர்வமுள்ள பயனாளிகள் அரசு விதிமுறைகளின்படி தகுதியிருப்பின் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.

விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

2022-23-ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளி பயனடைந்திருக்கக் கூடாது. கட்டுமான பணிகள், தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் பயனாளிகள் தங்களது ஆதார் அட்டைநகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீதம் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் வங்கி கடன் ஒப்புதல் விவரம்)

3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23-ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின்கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ்களுடன் தங்களது அருகாமையில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story