50 போலீசார் அதிரடி சாராய வேட்டை


50 போலீசார் அதிரடி சாராய வேட்டை
x

கல்வராயன்மலையில் 50 போலீசார் அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்:

கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், நரசிம்மஜோதி, ஏழுமலை, பாண்டியன் ஆகியோர் தலைமையில் 50 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 குழுக்களாக பிரிந்து ஆரம்பூண்டி, சேத்தூர், வாரம், சின்னதிருப்பதி, கொடமாத்தி, மேல்பாச்சேரி உள்ளிட்ட 10 கிராமங்களில் இன்று அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டு இருந்த 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். மேலும் லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த சாராயத்தையும் கீழே கொட்டி, தீயிட்டு எரித்தனர். இந்த சாராய வேட்டை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story