500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

வாணியம்பாடி அருகே 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் கோட்டாட்சியர் பிரேமலதா, தாசில்தார் சம்பத் அடங்கிய குழுவினர் அரசு அலுவல் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை அடுக்கியவாறு, வேகமாக வந்த ஒருவர் அதிகாரிகள் நிறுத்த முயன்றபோது வாகனத்தை கீழே தள்ளி விட்டு ஓட்டம்பிடித்தார்.

இதனையடுத்து, கீழே சாய்ந்த மூட்டைகளை கைப்பற்றி சோதனை மேற்கொண்டதில், அவற்றில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

அதிகாரிகள் அதனை மீட்டு வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

தப்பி ஓடியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

1 More update

Next Story