500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

சோளிங்கர் பஸ் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையத்தில் ஆந்திராவுக்கு கடந்த ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சோளிங்கர் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அவர் பஸ் நிலையத்தில் சோதனை செய்தார். அப்போது ஆந்திராவுக்கு கடத்த 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தார்.

1 More update

Next Story