பொள்ளாச்சியில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சியில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலைய சரகத்திற்கு உள்பட்ட சின்னாம் பாளையம், ஈப்பன் நகரில் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது ஈப்பன் நகர் அம்மா பூங்கா அருகே புதரில் அரிசி மூட்டைகள் கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அருகில் சென்று புதரில் கிடந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் புதருக்குள் கிடந்த 50 கிலோ எடை கொண்ட 10 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசியை மீட்டு பொள்ளாச்சி உணவு பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story