பசுமையை வலியுறுத்தி 500 மரக்கன்றுகள் நடும் விழா


பசுமையை வலியுறுத்தி 500 மரக்கன்றுகள் நடும் விழா
x
தினத்தந்தி 9 July 2023 11:06 PM IST (Updated: 10 July 2023 5:43 PM IST)
t-max-icont-min-icon

பெல் தொழிற்சாலை வளாகத்தில் பசுமையை வலியுறுத்தி 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை மற்றும் அதன் ஊரகப்பகுதிகளில் கிரீன்கோ அமைப்பின் முதற்கட்ட முயற்சியாக பசுமையை வலியுறுத்தி 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை செயல் தலைவர் ராஜீவ்சிங் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், சுற்றுசூழலை பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதின் அவசியம் குறித்து விளக்கி கூறினார். மேலும் கூடிய விரைவில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கும் திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து மண்ணும் மரமும், முகுந்தராயபுரம் அரிமா சங்கம் போன்ற தொண்டு அமைப்புகளின் உதவியோடு பெல் தொழிற்சாலை முதல் மலைமேடு வரையிலான பகுதிகளில் இடங்களை தேர்வு செய்து 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் கிரீன்கோ தலைவரும் பெல் துணை பொது மேலாளருமான எம்.கே.சர்மா, ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ்குமார், ஸ்ரீபுரம் தங்க கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story