ஆடித்திருவிழாவில் 5 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்


ஆடித்திருவிழாவில் 5 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
x

வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் 5 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் 5 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

ஆடித்திருவிழா

முதுகுளத்தூர், மு.தூரி செல்வநாயகபுரம் ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோவிலில் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த 23-ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் தீபாரதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் தினமும் கலை நிகழ்ச்சி சொற்பொழிவு, மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

பால்குடம்

9-ம் நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகுளத்தூர் விநாயகர் கோவிலில் இருந்து பஸ் நிலையம் வழியாக வடக்கு வாசல் செல்லியம்மன் கோவிலை பால்குடம் ஊர்வலம் சென்றதும் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் நகர் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு, இன்ஸ்பெக்டர் இளவரசன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story