5,004 கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலம்
5,004 கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலமாக பொதுமக்கள் சென்றனர்.
சிவகங்கை
தேவகோட்டை
தேவகோட்டை போலீஸ் நிலையம் எதிரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் 34-ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழாவை முன்னிட்டு 5004 கஞ்சி கலயத்தை ஊர்வலமாக எடுத்து சென்று பெண்கள் வழிபட்டனர். முன்னதாக கருதாஊரணியில் இருந்து புறப்பட்ட மகளிர் கஞ்சி கலயம் ஊர்வலத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பங்கேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற கஞ்சி கலய ஊர்வலம் ஆதிபராசக்தி கோவிலை வந்தடைந்தது. அங்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
Related Tags :
Next Story